Discoverஎழுநாதீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்
தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

Update: 2022-12-19
Share

Description

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகரின் தெற்கில் 13 கி.மீ. தூரத்தில் இறக்காமம் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் வடக்குப் பக்கத்தில் மாயக்கல் எனும் சந்நியாசி மலை காணப்படுகிறது. இதை அடுத்து மாணிக்கமடு எனும் சிறிய கிராமமும், ஓட்டுத் தொழிற் சாலை யும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்தவுடன்  குடிவில் எனும் கிராமம் காணப்படுகிறது



இக்கிராமத்தின் வடகிழக்கில் குடிவில் குளம் அமைந்துள்ளது. குளத்திற்கு சற்று தூரத்தில் கல்லோயா எனும் பட்டிப்பளை ஆறு ஓடுகிறது. கிராமத்தின் இடது பக்கமாக கல்லோயா ஆற்றுக்குச் செல்லும் பாதையில், ஆற்றுக்கு அருகில் மலைப்பாறைகள் நிறைந்த ஒரு காடு காணப்படுகிறது. இங்கு இயற்கையான கற்குகைகள் சில காணப்படுகின்றன. இவற்றில் ஒரு கற்குகையில் கற்புருவம்  வெட்டப்பட்டு அதன் கீழே பிராமி எழுத்துக்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் வெட்டில் தான் இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் வணிகன் மற்றும் அவ னது மனைவி பற்றிய விபரம் காணப்படுகிறது.



     இக்கல்வெட்டில் “திகவாபி பொரண வனிஜஹ .....ய புதஹ பரியய தமெத திசய லேன” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பேரா சிரியர் பரணவிதான “The cave of the Merchants who are the citizens of Dighavapi, of the sons of .. .. .. and of the Wife Tissa, the Tamil” என மொழி பெயர்த்துள்ளார். இது “தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் .... மனைவி திசவின் குகை” எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டு Inscriptions of Ceylon-Volum-1 எனும் நூலில் 480 வது கல்வெட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.





இக்கல்வெட்டு காணப்படும் மலைப்பகுதியில் இரண்டு கற்குகை கள் உள்ளன. இவற்றில் ஒன்றில் இக்கல்வெட்டு காணப்படுகிறது.  இம்மலைப்பாறைப்பகுதி பெருமளவில் உடைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள  இரண்டு கற்குகைகளில் ஒன்று உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.  கல் வெட்டு காணப்படும் கற்குகையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள பகுதியும் சேதமாக்கப்பட்டுள்ளது. சில எழுத்துக்கள் மட்டுமே தற்போது இங்கு காணப்படுகின்றன.



உடங்கை ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றவுடன் கை காட்டி சந்தி உள்ளது. இச்சந்தியின் மேற்குப் பக்கமாகச் செல்லும் பாதையில் சுமார் ஒரு 700 மீற்றர் தூரத்தில் இம்மலைப்பகுதி அமை ந்துள்ளது. இங்கு வடக்கு தெற்காக மூன்று மலைகள் உள்ளன. இவற் றில் வடக்குப் பகுதியில் உள்ள மலை அளவில் பெரியதாகும். இம் மலை சுமார் ஒரு கி.மீ நீளமும், 400 மீற்றர் அகலமும் கொண்ட தாகும். இங்கிருந்து 400 மீற்றர் தெற்கில் அடுத்த மலை அமைந் துள்ளது. இது 300 மீற்றர் நீள,அகலம் கொண்ட சிறிய மலையாகும். இங்கிருந்து தெற்கில் 400 மீற்றர் தூரத்தில் உடங்கை ஆற்றின் அரு கில் அடுத்த மலை அமைந்துள்ளது. இது 400 மீற்றர் நீள,அகலம் கொண்ட மலையாகும்.


இம்மூன்று மலைகளும் தமிழரின் பாரம்பரிய, தொல்லியல் வரலா ற்றுச் சின்னங்களைக் கொண்ட மலைகளாகும். இம்மலையில் பாண் டியர் கால நாணயங்கள், லக்ஷ்மி வடிவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மலைப்பகுதி பண்டைய காலத்தில் பாண்டியர் ஆட்சி நிலவிய இடமாக இருந்துள்ளது எனலாம். இம்மூன்று மலைகளின் பெரும்பகுதி உடைத்து அழிக்கப்பட்டு ள்ளது. இம்மலைகள் நிறைந்த பகுதியும், இவற்றைச் சுற்றியுள்ள பிரதே சமும் பண்டைய தமிழர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புபட்ட பகுதிகளாகும்

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

தீகவாபியின் குடிமகனான தமிழ் வணிகன் பற்றிய குடிவில் கல்வெட்டு | இலங்கையில் பிராமி மற்றும் சிங்கள கல்வெட்டுக்களில் தமிழர் | என்.கே.எஸ்.திருச்செல்வம்

Ezhuna